நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் வேலையின்றி காத்திருக்கும் இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் ஸ்ரேயா சிங்
அக்., 1 முதல் டிச., 31 வரையிலான காலாண்டிற்கு மேற்கண்ட கல்வித்தகுதிகளை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, 5 ஆண்டு முடிந்த பதிவுதாரர்களும், ஒரு ஆண்டு முடித்த மாற்றுத்திறனாளிகளும் விண்ணப்பிக்கலாம்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர், 45 வயதும், மற்றவர்கள், 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மனுதாரர் குடும்ப ஆண்டு வருமானம், 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை.
மனுதாரர் அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் வாயிலாக எந்தவிதமான நிதி உதவித்தொகையும் பெறுபவராக இருக்க கூடாது. மனுதாரர் மாணவ, மாணவியராக இருத்தல் கூடாது.
தொலைதுாரக் கல்வி அல்லது அஞ்சல் வழிக் கல்வி கற்கும் மனுதாரர்களுக்கு பொருந்தாது. மனுதாரர் உதவித்தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை தொடர்ந்து புதுப்பித்து வர வேண்டும். மேற்கண்ட தகுதியுடையவர்கள் உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும்.
மேலும், www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்விண்ணப்பத்தின், 7ம் பக்கத்தில் வி.ஏ.ஓ., மற்றும் ஆர்.ஐ.,யிடம் கையொப்பம் பெற்று வரவேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.