திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி அலுவலகம் முன், தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், அரசாணை எண்.152ஐ ரத்து செய்ய வலியுறுத்தி, நேற்று மாலை, ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் சங்க துணை பொது செயலாளர் தியாகராஜன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் கதிர்வேல் துவக்க உரையாற்றினார். சுகாதார ஆய்வாளர் மற்றும் அலுவலர்கள் சங்க மாநில துணை தலைவர் வெங்கடாசலம், அனைத்து துறை ஓய்வூதியர் அலுவலர்கள் சங்க தலைவர் இளங்கோவன், திருச்செங்கோடு நகராட்சி அலுவலர்கள் சங்க நிர்வாகி மோகன் உள்ளிட்ட திருச்செங்கோடு நகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.