கொரோனா பூஜ்யம்
சேலம்: சேலத்தில் கடந்த, 1ல் இருந்து, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, ஒற்றை இலக்கத்தில் இருந்தது. தொடர்ந்து சில நாளாக பாதிப்பு எண்ணிக்கை, 1, 2 என, ஏற்ற, இறக்கமாக மாறி, மாறி இருந்த நிலையில், நேற்று, பூஜ்யம் நிலையை அடைந்தது. அதனால் கொரோனா பூஜ்யம் பட்டியலில், நேற்று சேலம் மாவட்டம் மீண்டும் சேர்ந்துள்ளது.
உண்டியல் திருட்டு
பனமரத்துப்பட்டி: மல்லுார் அருகே பள்ளிதெருப்பட்டி ஊராட்சியில், கரை மேட்டு புதுமாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, அக்கோவில் கேட்டின் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்த மர்ம நபர்கள், உண்டியல், மைக்செட் ஆம்ளிபயர் ஆகியவற்றை திருடி சென்றனர். அந்த கும்பலை மல்லுார் போலீசார் தேடி வருகின்றனர்.