சென்னை: கேரளா மாநில நுகர்பொருள் வாணிப கழக உயரதிகாரிகள் குழு, சென்னையில் தமிழக அரசின், 'அமுதம்' பல்பொருள் அங்காடியை நேற்று பார்வையிட்டது.
தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களை கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்கிறது. 'அமுதம்' என்ற பெயரில் பல்பொருள் அங்காடிகளையும் நடத்துகிறது. தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பொது வினியோக திட்டத்தை தெரிந்து கொள்ள, கேரளா அரசின் நுகர்பொருள் வாணிப கழக தலைவர் சஞ்சீப் பட்ஜோலி தலைமையில் அதிகாரிகள் குழு, நேற்று சென்னை வந்தது.
அக்குழு, கீழ்பாக்கத்தில் உள்ள வாணிப கழக தலைமை அலுவலகத்தில், அதன் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. பின், கோபாலபுரத்தில் உள்ள வாணிப கழக சேமிப்பு கிடங்குகள், அமுதம் அங்காடி, ரேஷன் கடையை பார்வையிட்டு, அவற்றின் செயல்பாடுகள் குறித்து, தமிழக அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டது.