பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே இரும்பு பாலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பழனிவேல்- சித்ரா தம்பதியினர் .இவர்களின் மகன் விஷால். பந்தலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு ஆங்கில பிரிவில் படித்து வருகிறார். இவரது தந்தை விளையாடுவதற்காக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் பலகை மூலம் டிரக் தயாரித்து கொடுத்துள்ளார்.
அதனைப் பார்த்து விஷாலுக்கு தானும் ஏதேனும் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவாக அட்டைப்பெட்டி துண்டுகள், மற்றும் பயன்படுத்தி வீசி எறிந்த சிரஞ்ச்கள், குளுகோஸ் ஏற்றும் ரப்பர் குழாய்கள், தண்ணீர் ஆகியவற்றை கொண்டு,பொக்லைன் இயந்திரத்தை தயாரித்துள்ளார். சிறிய பொருட்களை எடுத்து வைத்து, இயந்திரத்தை இயக்கியும் காட்டுகிறார்.
தண்ணீரின் உந்து விசை மூலம், இந்த மாதிரி., பொக்லைனை செயல்படுத்த இயலும் என்றும், யாரேனும் தனக்கு உதவி செய்து ஊக்கம் அளித்தால் மினி பொக்லைன் இயந்திரத்தை தன்னால் தயாரிக்க முடியும் என்ற நம்பிக்கை தெரிவிக்கிறார் ஒன்பதாம் வகுப்பு மாணவர் விஷால் கூறினார்.