திருநின்றவூர்:திருவள்ளூர், செருக்கனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 31; ராணுவ வீரர். இவரது மனைவி சங்கீதா, 25. இவர் கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஐந்து நாட்களுக்கு முன், எழும்பூர் மருத்துவமனையில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் யாருக்கும் தெரியாமல், மருத்துவமனையில் இருந்து சென்ட்ரல் - திருத்தணி ரயிலில் ஏறியுள்ளார்.
காலை 6:30 மணியளவில், ரயில் திருநின்றவூர் -- வேப்பம்பட்டு நிலையங்களுக்கு இடையே செல்லும்போது, ரயிலில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து, திருவள்ளூர் ரயில்வே போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆவதால், திருவள்ளூர் ஆர்.டி.ஓ., விசாரிக்கின்றனர்.
நுங்கம்பாக்கம் - கடற்கரை நோக்கி, நேற்று காலை சென்ற மின்சார ரயிலில், அடிபட்டு பெண் ஒருவர் பலியானார். தகவலறிந்த எழும்பூர் ரயில்வே போலீசார், உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அவருக்கு 45 வயது இருக்கும். அவர் குறித்த வேறெந்த தகவலும் தெரிய வில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.