துாக்கில் சிறுமி தற்கொலை
திருப்பூர், முதலிபாளையம், குமார் நகரை சேர்ந்தவர் பவித்ரா, 17; பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வீட்டில் அதிகமாக மொபைல் போன் பயன்படுத்தி வந்தார். இதை பவித்ராவின் தாய் கண்டித்தார். இதனால், கோபமடைந்த பவித்ரா வீட்டில் யாரும் இல்லாத போது துாக்குமாட்டி தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் வாலிபர் பலி
திருப்பூர், காங்கேயம்பாளையத்தை சேர்ந்தவர் அருண்குமார், 25. கோவை - சேலம் ரோட்டில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். பல்லகவுண்டன்பாளையம் அருகே சென்ற போது, அவ்வழியாக வந்த அரசு பஸ், டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த அருண்குமார் அதே இடத்தில் இறந்தார். ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.
தொழிலாளி சடலம் மீட்பு
திருப்பூர் தொட்டிய மண்ண ரையை சேர்ந்தவர் வாணி ராஜன், 48; தொழிலாளி. இவருக்கு மதுபழக்கம் இருந்தது. பலரிடம் கடனை வாங்கி, திருப்பி செலுத்தாமல் அவ்வப்போது, வீட்டை விட்டு வெளியேறி சென்று விட்டு, பின் திரும்பி விடுவார். கடந்த, 22ம் தேதி போதையில் வீட்டில் இருந்து வெளியே நபர் திரும்பவில்லை. பின், வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றில் வாணி ராஜன் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
ரூ. 25 ஆயிரம் திருட்டு
மூலனுார், ஊத்துார் மலமேட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன், 62; விவசாயி. கடந்த 7ம் தேதி வீட்டை பூட்டி சொந்த வேலையாக கடலுாருக்கு சென்றார். 19ம் தேதி வீட்டுக்கு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு உடைந்து இருந்தது. உள்ளே சென்ற போது, பீரோவில் இருந்த, 25 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரிந்தது. மூலனுார் போலீசார் வழக்கு பதிந்து, மூலனுார், ஓசப்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து, 47 என்பவரை கைது செய்து, 25 ஆயிரம் ரூபாயை மீட்டனர்.
முதியவர் தற்கொலை
கணக்கம்பாளையம் ஊராட்சி குட்டையன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சித்தேஸ்வரன்; இவரது தந்தை பாலகிருஷ்ணன், 85. உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 24ம் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. தேடி பார்த்தபோது, கணக்கம்பாளையம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிணற்றில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. பெருமாநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.