திருப்பூர்:இந்தியா அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம் அலகு -2 சார்பில், கல்லுாரி வளாகத்தில் அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது.
நாட்டு நலப்பணித் திட்டம் அலகு - -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். காவல் துணை ஆணையர் வனிதா பேசியதாவது:
இந்திய அரசியலமைப்பு சட்டம் உலக வரலாற்றில் சிறப்பு பெற்று விளங்குகிறது. உலகின் மிக பெரிய மக்களாட்சி கொண்ட நாடாக நம் நாடு விளங்கு வருவதற்கு நம்முடைய அரசியலமைப்பு வழிவகுக்கிறது. நாகரீக சமுதாயத்தில் உலகளாவிய கொள்கையில் பற்றுக்கொண்டு, நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமைக்கு, வளர்ந்து வரும் ஆபத்தை கருத்தில் கொண்டு, குடிமக்கள் அடங்கிய குழுக்களில் ஏற்படும் பிரச்னைகளை அமைதியான வழிகளில் தீர்க்க வேண்டும்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. நாம் அனைவரும் நம் அரசியலமைப்பு சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். மேலும், அவற்றை பாதுகாக்க ஒவ்வொருவரும் தனிக்கவனம் எடுத்து கொள்ளவோம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
மாணவ செயலர்கள் சுந்தரம், பூபதி ராஜா, ராஜபிரபு, அருள்குமார், அரவிந்தன், பூபாலன் ஆகியோர் தலைமையில், 75க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.