பாரதியார் பல்கலை பாடத்தில் திருப்பூர் குமரன் வரலாறு செனட் உறுப்பினர் தகவல்
Added : நவ 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

திருப்பூர்:''கோவை பாரதியார் பல்கலையில் போராட்ட வீரரான திருப்பூர் குமரனின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க முயற்சிகள் மேற் கொள்ளப்படும்,'' என, பல்கலை செனட் உறுப்பினர் டாக்டர் ஆதலையூர் சூரியகுமார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் திருப்பூர் குமரனின் தியாகம் மறக்க முடியா தது. இவரது வாழ்க்கையும், அவரது போராட்ட வழிமுறைகளும், நெஞ் சுறுதியும் இளைஞர்களிடையே தேசபக்தியை வளர்க்கக்கூடியது.

இந்திய சுதந்திரத்தின், 75வது ஆண்டு நிறைவை கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் திருப்பூர் குமரனின் வாழ்க்கை வரலாறு பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுவது என்பது அவருக்கு செலுத்தும் பெரும் புகழஞ்சலியாக இருக்கும்.

குறிப்பாக, நாடக வடிவில் படிக்கும் போது, இன்றைய இளைஞர்களுக்கு எளிதில் சென்றடையும். இதற்காகவே, திருப்பூர் தமிழ் பட்டறை இலக்கிய பேரவை தலைவர் ஆழ்வை கண்ணன் எழுதிய திருப்பூர் குமரன் நாடக நுால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இத்துடன் உள்ளூர் வரலாற்றையும், வளர்ச்சியையும் மாணவர்களுக்கும் எடுத்துக்கூறும் விதமாகவும், தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், திருப்பூர் தொழிலதிபர்கள் பத்து பேரின் வாழ்க்கை வரலாற்றையும் சேர்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு, அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X