அவிநாசி:உலக மாற்றுத் திறனாளிகள் தினம் டிச., 3ம் தேதி நடைபெறுகிறது. மாற்றுத்திறன் மாணவர்களின் தன்னம்பிக்கை மற்றும் சமுதாய இடைவெளியை மாற்றும் விதமாக நடனம், கலை நிகழ்ச்சிகள் பக்தி பாடல் பாடுவது, மாறுவேட போட்டி உள்ளிட்டவை மாற்றுத்திறன் மாணவர்களின் பெற்றோருடன் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நடைபெற்றது.
அவிநாசி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பயிற்சி ஆசிரியர் ஜெயப்பிரியா, சுரேஷ், கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன், உட்பட பலர் பங்கேற்றனர்.