கடலுார் : மண்டல அளவிலான கபாடி போட்டியில் கடலுார் சி.கே. பொறியியல் கல்லுாரி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
அண்ணா பல்கலைக் கழக 5வது மண்டலம் சார்பில், பொறியியல் கல்லுாரிகளுக்கு இடையிலான கபடி போட்டி, செங்கல்பட்டு மாவட்டம், கற்பக விநாயகா பொறியியல் கல்லுாரியில் நடந்தது. 15க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் பங்கேற்றன.
இதில், சி.கே.பொறியியல் கல்லுாரி கபடி மாணவர்கள் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து, கோப்பையை வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை சி.கே.கல்வி குழும நிர்வாக இயக்குநர் அமுதவள்ளி ரங்கநாதன், செயல் மேலாளர் சிவா, சி.கே. கல்லுாரி முதல்வர் சரவணன், துணை முதல்வர் அருளாளன், சி.கே. கல்விக்குழும மனிதவள மேலாளர் கவுரி, துறைத் தலைவர்கள், வேதியியல் துறை பேராசிரியர் தண்டபாணி, உடற்கல்வி தலைமை அலுவலர் கார்த்திக், உடற்கல்வி இயக்குநர் ராஜேஷ், கார்த்திகேயன், ராஜேஷ். சிவக்குமார் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.