திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆய்வுசெய்த கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன், விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கினார்.
நேற்று காலை கொம்பாடி கிராமத்தில் அமைக்கப்படும் தரிசு நில தொகுப்பை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
அவருடன் கலெக்டர் அனீஷ் சேகர், கூடுதல் கலெக்டர் சரவணன், உதவி கலெக்டர் திவ்ய அன்ஸ் நிகாம் பங்கேற்றனர்.
திடல் செயல்பாடுகள் குறித்து விவசாயிகளிடம் விசாரித்து, உளுந்து விதை, நுண்ணூட்ட உரம், உயிர் உரம், தென்னங்கன்றுகள், பழச்செடி கன்றுகள் வழங்கினர்.
இணை இயக்குனர் விவேகானந்தன், துணை இயக்குனர்கள் சுப்புராஜ், ராணி, தோட்டக்கலை இயக்குனர் ரேவதி, செயற்பொறியாளர் முரேஷ் குமார், உதவி இயக்குனர் பிரபா திட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர். ஏற்பாடுகளை உதவி இயக்குனர் மீனாட்சி சுந்தரம் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகம், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் விடுதி, சுப்பிரமணிய சுவாமி கோயில் பிரசாத ஸ்டால், திருமண மண்டபத்தில் ஆய்வு மேற்கொண்டார். தாசில்தார் பார்த்திபன், கோயில் துணை கமிஷனர் சுரேஷ், பணியாளர்கள் உடன் சென்றனர்.