திண்டுக்கல், : திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடந்த கிரிக்கெட் லீக் போட்டியில் ஆர்.வி.எஸ்., அணி வெற்றி பெற்றது,
கிரிக்கெட் லீக் போட்டிகள் நடந்து வரும் நிலையில் 2வது டிவிசன் பிரிசித்தி வித்யோதயா கோப்பைக்கான லீக் போட்டி திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., கல்லுாரி மைதானத்தில் நடந்தது.
முதலாவதாக விளையாடிய எரியோடு ஸ்கில் அணி 25 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது.ரமேஷ்பாபு41 ரன்கள்,நவீன் 3 விக்கெட் வீழ்த்தினர். சேசிங் செய்த திண்டுக்கல் பிளே பாய்ஸ் அணி 16 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கார்த்திக் 53 ரன்கள் விளாசினார்.விக்னேஷ் 3 விக்கெட் எடுத்தார்.இதை தொடர்ந்து நடந்த போட்டியில் ஒட்டன்சத்திரம் சாமுராய் அணி 23.4 ஓவரில் 87 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.ஜெய்சிவாஸ்ரீ25 ரன்கள் அடித்தார்.புகழேந்திரன் 6 விக்கெட்
வீழ்த்தினார்.சேசிங் செய்த திண்டுக்கல் அணி 14.3 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.ஆன்டோ பிரான்ஸ் 45 ரன்கள் எடுத்தார்.எக்ஸ்பிரஸ்லெவன் அணி 23.2 ஓவரில் 101 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அருண்குமார் 3 விக்கெட் வீழ்த்தினார்.
சேசிங் செய்த ஆர்.வி.எஸ்.,ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 23.1 ஒவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. 3வது டிவிசன் ஓட்டல் பார்சன்ஸ் கோர்ட் கோப்பைக்கான போட்டி ஆர்.வி.எஸ்.,கல்லுாரி மைதானத்தில் நடந்தது.
முதலில் பேட்டிங் செய்த கொடை அணியினர் 23.3 ஓவரில் 137 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.சண்முக சுந்தரம் 4 விக்கெட் எடுத்தார்.சாம்பியன்ஸ் அணியினர் 21.1 ஓவரில் 121 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தனர்.மகேஸ்வரன் 32 ரன்கள் எடுத்தார்.மனோஜ்குமார்
3விக்கெட் எடுத்தார். 4வது டிவிசன் ஓட்டல் ஸ்ரீபாலாஜி பவன் கோப்பைக்கான லீக் போட்டி பி.எஸ்.என்.ஏ.,கல்லுாரி மைதானத்தில் நடந்தது.முதலில் பேட்டிங் செய்த சச்சீன் அணி 25 ஓவரில் 205 ரன்களுக்கு 5 விக்கெட் எடுத்தனர்.
பாலமுருகன் 55,தினேஷ்குமார் 53,அஷ்ரப் டீன் 38 ரன்கள் எடுத்தனர்.ராஜா 3 விக்கெட் எடுத்தனர்.சேசிங் செய்த ஸ்கை அணி 23.3 ஓவரில் 101 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகி தோல்வியடைந்தது.அமல தீபன்31 ரன்கள் எடுத்தார்.முகமது பிலால் 3 விக்கெட் எடுத்தார்.