திண்டிவனம் : திண்டிவனம் வால்டர் ஸ்கடர் மேல்நிலைப் பள்ளியில் என்.சி.சி., மாணவர்களுக்கு கவாத்து பயிற்சி நடந்தது.
பள்ளி மைதானத்தில் நடந்த பயிற்சியை தலைமையாசியர் சந்திர தேவநேசன் துவக்கி வைத்தார்.
என்.சி.சி., மாணவர்கள் 100 பேருக்கு ராணுவ வீரர் அவில்தார் சிவக்குமார், பள்ளியின் என்.சி.சி., முதன்மை அலுவலர் மோகன் ஆகியோர் கவாத்து பயிற்சி அளித்தனர்.
பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பிரேம்சந்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.