மந்தாரக்குப்பம் : கெங்கைகொண்டான் பேரூராட்சி சமுதாய கூடத்தில், வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
பேரூராட்சி சேர்மன் பரிதா அப்பாஸ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ராயர், திருமாவளவன், சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தனர்.
கெங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பூங்கொடி வரவேற்றார். கம்மாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் அருண்ராஜ் மருத்துவ திட்டம் குறித்து பேசினார்.
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு பொது மருத்துவம், எலும்பு முறிவு சிகிச்சை, பல், குழந்தை, மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர். ஆய்வக பரிசோதனை மூலம் ரத்தம், சிறுநீர், சளி பரிசோதனை செய்யப்பட்டது.
முகாமில் மக்களை தேடி மருத்துவம் திட்டம், காசநோய் விழிப்புணர்வு, தொழுநோய் விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
துணை சேர்மன் பெலிக்ஸ், நகர செயலாளர் பக்தவச்சலம், சுகாதார ஆய்வாளர்கள் கலியபெருமாள், அர்னால்டு ஜான்சன், கிரினாத், செவலியர் அருள் ஓம்சக்தி, மருந்தாளர் முருகப்பெருமாள், வட்டார சுகாதார புள்ளியாளர் முருகன், மருத்துவமல்லா மேற்பார்வையாளர் முரளி உட்பட பலர் பங்கேற்றனர். மேற்பார்வையாளர் பாண்டியராஜூ நன்றி கூறினார்.