கடலுார் : கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு 'சிஏ' கேரியர் கவுன்சிலிங் நடந்தது.
பள்ளியின் தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் மதுர பிரசாத் பாண்டே பேசினார். சிறப்பு விருந்தினராக மஞ்சு சுபாஷினி, ரஞ்சித்குமார், மோகன்ராஜ், குமரகுரு ஆகியோர் 'சிஏ' படிப்பிற்கான முக்கியத்துவம் பற்றி பேசினர். மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
வணிகவியல் துறைத் தலைவர் ரவிக்குமார் நன்றி கூறினார்.