பண்ருட்டி, : பண்ருட்டி அருகே தென்பெண்ணையாற்றில், தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல், வரலாற்று ஆர்வலர் மோகனகண்ணன் ஆகியோர் மேற்புற கள ஆய்வு செய்து, பழமையான சுடுமண் விநாயகர்சிலையைகண்டெடுத்தனர்.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கூறியதாவது:
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் தென் பெண்ணை ஆற்றங்கரையில் கள ஆய்வு செய்தபோது சுடுமண்ணாலான விநாயகர்சிலைகண்டறியப்பட்டது. இதன்உயரம் 15 செ.மீ, அகலம் 7 செ.மீ.,
சுடுமண் விநாயகர்சிலை இரண்டு கரங்களுடன் காணப்படுகிறது. தலையில் கரண்ட மகுடமும், இரு காதுகளிலும் ஓட்டையும், துதிக்கை நீண்டும் உள்ளது. இரு கைகளில் உள்ள தோள்களிலும் காப்பு அணிந்துள்ளார். விநாயகர், குழந்தையைப் போன்று பீடத்தின் மீது அமர்ந்துள்ளார்.
இதற்கு முன்பு பண்ருட்டி தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதிகளில் சுடுமண்ணாலான உருவ பொம்மைகள் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் சுடுமண்ணாலான கடவுள் உருவசிலைகிடைத்தது இதுவே முதல் முறை. சுடுமண் விநாயகரின் சிற்ப அமைதியை பார்க்கும் போது இது சோழர் காலத்தை சேர்ந்தது என கருதப்படுகிறது. மண்ணில் புதைந்திருந்த இந்த சுடுமண் சிலை, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக வெளியே வந்துள்ளது. இவ்வாறு அவர், கூறினார்.