கூடலுார் : கூடலுாரில் ஒரே நாளில் ரூ. ஒரு லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள மூன்று அலைபேசிகள் திருடு போனது.
இது தொடர்பாக அணைப்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் புகாரில் கூடலூர் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் தலைமையிலான போலீசார் தொழில் நுட்ப உதவியுடன் அலைபேசி சிக்னல் மூலம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர்.
பொம்மஜ்ஜி அம்மன்கோவில் தெருவை சேர்ந்த முருகனை 52, பிடித்து விசாரித்ததில் மூன்று அலைபேசிகள் திருடியது தெரியவந்தது. இவரை கைது செய்து அலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டது. கூடலுார் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.