சாணார்பட்டி : -சாணார்பட்டி தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் ஊராட்சிகளில் வாக்காளர் பெயர் சேர்ப்பு,நீக்கம் தொடர்பாக பூத் கமிட்டி கூட்டம் நடந்தது.
தி.மு.க., மாவட்ட பொருளாளர் க.விஜயன் தலைமையில், சாணார்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜன் முன்னிலையில் கணவாய்பட்டி,வேம்பார்பட்டி, கோம்பைபட்டி, திம்மணநல்லுார், மருநுாத்து, ஆவிளிபட்டி, அஞ்சுகுழிப்பட்டி, சாணார்பட்டி, பஞ்சம்பட்டி, தவசிமடை, எமக்கலாபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் நடந்த இதில், தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் காளியப்பன், ஊராட்சிகளை சேர்ந்த கிளை நிர்வாகிகள் ஓட்டுச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.