நத்தம் : நத்தம் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்ஷா தலைமையில் நடந்தது.
துணைத்தலைவர் மகேஸ்வரி சரவணன், செயல் அலுவலர் சரவணகுமார், முன்னிலை வகித்தனர். நத்தம் பஸ்ஸ்டாண்ட் குடிநீர் தொட்டி, கோவில்பட்டி குடிநீர் தொட்டியை ரூ. 35 லட்சம் மதிப்பில் பராமரிக்க, 18 வார்டுகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்வது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வி சித்ரா மேரி, கவுன்சிலர்கள் வசந்த சுஜாதா,சிவா,ராதிகா, இஸ்மாயில், கண்ணன், உமாமகேஸ்வரி, சகுபர் சாதிக், அலுவலக உதவியாளர்கள் ஜெய்சங்கர், அழகர்சாமி,பிரசாந்த் கலந்து கொண்டனர்.