நத்தம் : நத்தம் அருகே ரெட்டியப்பட்டி ஊராட்சியில் நாய்களுக்கான வெறி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
ரெட்டியபட்டி ஊராட்சி தலைவர் சாத்தி பவுர் தலைமை வகித்தார். கால்நடை உதவி மருத்துவர் முருகானந்தம் தலைமையிலான மருத்துவ குழு 35க்கு மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.ஊராட்சி செயலர் செந்தில் குமரன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
வத்திபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாய் கடித்தால் செய்ய வேண்டி முதலுதவியை தொடர்ந்து, அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். டாக்டர் ஷில்பா சார்லஸ், சுகாதார ஆய்வாளர் மோகன் கலந்து கொண்டனர்.