ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பது குறித்த அவசியத்தை முறையாக எடுத்துரைக்காமல் மின் நுகர்வோர்களை தி.மு.க., அரசு துன்புறுத்தும் செயல் கடும் கண்டனத்திற்குரியது. ஆதார் எண் இணைப்பிற்கான கால அவகாசத்தை ஆறு மாத காலம் நீட்டிப்பதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
-- பன்னீர்செல்வம், தமிழக முன்னாள் முதல்வர்
அடுத்த மாதம் பணி ஓய்வு பெற வேண்டிய அருண் கோயலை விருப்ப ஓய்வு கொடுக்க வைத்து மறுநாளே தேர்தல் ஆணையராக நியமிக்க வேண்டிய கட்டாயம் என்ன என்பதை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஜனநாயகத்தின் துாணாக விளங்கக் கூடிய தேர்தல் ஆணையத்தை தன் கைப்பாவையாக மாற்ற முற்படும் மோடியின் ஜனநாயக விரோதப் போக்கை காங்., வேடிக்கைப் பார்க்காது. இந்த நியமனத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிப்பது வரவேற்கத்தக்கது.
- கே.எஸ்.அழகிரி, தமிழக காங்., தலைவர்
கர்நாடக தேசிய கவி, குவெம்புவின் பெயரால் வழங்கப்படும் தேசிய விருது, தமிழ் எழுத்தாளர் இமையத்துக்கு வழங்கப்படுவது பெருமை. அவருக்கு வாழ்த்துக்கள்.
- பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் மாநில செயலர்