கூடலுார் : யர்கேம்ப் 18ம் கால்வாய் தொட்டிப் பாலத்தை ஒட்டி மண் அரிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து கூடலுார், கம்பம், பண்ணைப்புரம், கோம்பை, தேவாரம், போடி மீனாட்சிபுரம் வரை செல்லும் 18-ஆம் கால்வாய் திட்டம் உள்ளது. இக் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தலை மதகுப்பகுதியான லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றில் இருந்து 1 கி.மீ., தூரத்தில் தொட்டி பாலம் உள்ளது. இப் பாலத்தை ஒட்டி கரைப் பகுதியில் மண் அரிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. உடைந்து மிகப்பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன் இப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வளத்துறை அதிகாரிகள் மணல் மூடைகளை அடுக்கி தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என 18 ம் கால்வாய் விவசாயிகள் வலியுறுத்தினர்.