பழநி : திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி பகுதிகளில் தினசரி சேகரிக்கும் குப்பையை தரம் பிரிக்க சொந்த இடங்கள் இல்லாமல் ஆங்காங்கு கொட்டப்பட்டு தீ வைக்கும் சம்பவங்களும் அரங்கேறுகிறது .
மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் 306 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் திடக்கழிவு மேலாண்மைக்கான நிரந்தர பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இப்பணிகளில் இருந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான காலி இடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பபடவில்லை. ஊராட்சிகளில் குப்பையை அகற்றி சேகரித்து பிரிக்க நிரந்தர சொந்த இடமில்லை. பல ஊராட்சிகளின் குப்பை , குளம்கரை , சாலை ஓரம், பழைய கிணறுகளிலும் கொட்டி வருகின்றனர். இதனால் நிலத்தடி நீர் சுகாதாரக் கேடு அடைகிறது. கிணறுகளில் குப்பையை கொட்டுவதால் நிலத்தடி நீர் பாதிக்கிறது சாலை ஓரங்களில் குப்பை கொட்ட நாளடைவில் தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் உருவாகும் நச்சு புகையால் பலரும் பாதிக்கின்றனர்.
ஊராட்சிகளுக்கு பொதுவான குப்பை சேகரிக்கும் இடங்களை நிரந்தரமாக ஒதுக்கி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதோடு குப்பை சேகரிக்கும் பணியாளர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான அதிகாரங்களை ஊராட்சிக்கு வழங்க வேண்டும்.
.............
நடவடிக்கை எடுங்க
ஊராட்சி குப்பை கழிவுகள் சாலையோரத்திலும், குளம்கரைகளிலும் கொட்டப்படுவதால் சுகாதாரக் கேடு ஏற்படும் நோய் தொற்று அபாயம் ஏற்படுகிறது. சாலை ஓரங்களில் கொட்டப்படும் குப்பைக்கு தெரு நாய்களும் கூட்டமாக சுற்றி வருவதால் வாகன ஓட்டிகளும் விபத்துக்களில் சிக்குகின்றனர். இதனை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரகாஷ் , விவசாயி , நாகூர்.
.................