திண்டுக்கல் : தெருக்கள் முழுவதும் கழுத்தை நீட்டிக் கொண்டிருக்கும் பாதாள சாக்கடை திட்ட மேன்ேஹால்கள், சேதமடைந்த சாலை, உபயோகமற்ற தண்ணீர் தொட்டி , சீரமைப்பு பணிக்காக ஏங்கி கொண்டிருக்கும் சாக்கடைகள், படையெடுக்கும் கொசுக்கள் , தெருவிளக்கு பற்றாக்குறை என அடுத்தடுத்த இன்னல்களை சந்தித்து வருகின்றனர் திண்டுக்கல் மாநகராட்சி 8வது வார்டு மக்கள்.
நாயக்கர்புதுதெரு ,1,2,3வது தெரு, காளிமுத்துபிள்ளை 1,2,3,4, சந்துக்கள் அர்ஜினபிள்ளைசந்து, நாட்டாமைக்காரதெரு, சபேதார்சந்து, அஜித்சாய்சந்து, ராமசாமிதெரு, ராமசாமிகாலனி, ராஜீவ்காந்திதெரு, மயானசபை தெருக்களை உள்ளடக்கிய இந்த வார்டில், நாயக்கர் புது 2வது தெரு சாலைகள் சீரமைக்கப்பட்டு பல ஆண்டுகளான நிலையில் பாதாள சாக்கடை திட்டத்தின் மேன்ேஹால்கள் ஆங்காங்கே கழுத்தை நீட்டிக்கொண்டு விபத்து ஏற்படுத்த காத்து கிடக்கின்றன.
சீரமைப்பு பணிக்காக சாக்கடைகள் பல ஆண்டுகள் காத்திருந்தும் சீரமைப்பதில் துளியளவிலும் அக்கறை இல்லாமல் அதிகாரிகள் உள்ளனர். இதனால் தேங்கும் கழிவு நீரில் கொசுக்கள் படையெடுப்பு அதிகமாகி வருகிறது.
தெருவிளக்கு பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள இருளை சாதகமாக்கி மக்கள் நடமாடும் தெருவில் சமூக விரோத கும்பல் இரவு நேரங்களில் மது அருந்துவதும், சட்ட விரோத செயல்கள் புரிவதுமாக உள்ளன. இதனால் குடியிருப்பு வாசிகள் ஒருவித அச்சத்துடன் உள்ளனர்.