என்.எஸ்.எஸ்., முகாம்
மதுரை: மாவட்டத்தில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் சிறப்பு முகாம் துவக்க விழா சவுராஷ்டிர மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா துவக்கி வைத்தார். திட்டம் தொடர்பு அலுவலர்கள் ராஜ்குமார், நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். 17 பள்ளிகளை சேர்ந்த நாட்டுநலப் பணித் திட்டம் மாணவர்கள் பங்கேற்றனர்.
மதுரை எம்.ஏ.வி.எம்.எம்., மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் முகாம் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் உறங்கான்பட்டி கிராமத்தில் நடந்தது. பள்ளிச் செயலாளர் பொன்னம்பலம் தலைமையில் மரக்கன்றுகள் நட்டப்பட்டன. பள்ளி கமிட்டி உறுப்பினர்கள் குமார், ராஜா, ஊராட்சி ஒன்றிய தலைவர் முத்துச்செல்வி, என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் சித்ரா, மாணவர்கள் பங்கேற்றனர்.
வாடிப்பட்டி: டி.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., திட்ட மாணவர்கள் சார்பாக நாயக்கன்பட்டியில் சிறப்பு முகாம் துவக்க விழா நடந்தது. பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் ரங்கநாயகி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சந்திரன் முன்னிலை வகித்தார். திட்ட அலுவலர் ஆறுமுகம் வரவேற்றார். உதவி திட்ட அலுவலர் ராஜன் நன்றி கூறினார்.
திருமங்கலம்: பி.அம்மாபட்டியில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்., முகாம் துவக்க விழா நடந்தது. தலைமையாசிரியர் குமரேசன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவி கல்பனா முன்னிலை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன், பள்ளி கிராம கல்விக் குழு செயலாளர் சுகுமார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பாலசுப்பிரமணியம், எஸ்.எம்.சி., தலைவர் சந்திரமதி, ஆசிரியர்கள் குமராயி, ராமகிருஷ்ணன், காசிமாயன் பங்கேற்றனர். உதவி தலைமையாசிரியர் பாண்டி நன்றி கூறினார்.
மேலுார் : அரசு இருபாலர் மேல்நிலைப் பள்ளியின் என்.எஸ்.எஸ்., பணி துவக்க விழா வண்ணாம்பாறைபட்டியில் நடந்தது. தலைமையாசிரியர் ராவணன் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் பூமாரி முன்னிலை வகித்தார். முருகன், ராஜேஷ் பேசினர். ஆசிரியர்கள் பரமசிவம், சண்முகவேல் கலந்து கொண்டனர். திட்ட அலுவலர் முருகன் நன்றி கூறினார்.