கூடுவாஞ்சேரி : காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், வண்டலூர் ஊராட்சி, ஓட்டேரி விரிவு பகுதி, செந்தில் நகரில் இருந்து, மீஞ்சூர் மேம்பாலம் வெளிவட்ட சாலை பாலத்தின்கீழ் வரை, சாலையில் இருபுறமும் முட்செடிகள், புதர் போல் அடர்ந்து காணப்படுகின்றன,
மேலும், இங்கே இந்த சாலையிலே இரண்டு அரசு மதுபான கடைகள் இருப்பதால், இரவு நேரத்தில் வெளியூர்களில் இருந்து வந்து அரசு மதுபானங்களை பெற்று சாலையின் இருபுறமும் உள்ள முட்செடி மறைவில் இருந்து மதுபானம் அருந்துகின்றனர்.
எனவே, வண்டலூர் ரயில் நிலையத்தில் இருந்து, இருசக்கர வாகனத்தில் பணி முடிந்து வருபவர்கள் நடந்து வருவதற்கு இடையூறாக உள்ளது.
மேலும், இரவு நேரத்தில் பணி முடிந்து வரும் பெண்கள், அச்சத்துடனும் ஒருவித திருட்டு பயத்துடனும் இந்த சாலையை கடந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு காரணமான முட்செடிகளை அகற்றி தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.