ஸ்ரீபெரும்புதுார் : தாம்பரம் அருகே சோமங்கலம் அடுத்த நல்லுார் பகுதியை சேர்ந்த பரணி, 30, நந்தினி, 25, தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன் மணைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருவரும் வேரு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களின் பெண் குழந்தைக்கு தற்போது 6 வயதாகிறது. இவர் நல்லுாரில் உள்ள பரணியின் தந்தை ராஜேந்திரன், 60, வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், ராஜேந்திரன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த தேவராஜ், 55, ஆகியோர் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளனர்.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ராஜேந்திரன், தேவராஜ் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.