ஓட்டேரி : ஓட்டேரி, நியூ பேரன்ஸ் சாலையைச் சேர்ந்தவர் அப்துல் அஜிஸ். இவரது மனைவி சமீம், 39. இவர், பழைய வாழை மாநகரைச் சேர்ந்த ஆரோன், 39, என்பவரிடம், ஓராண்டுக்கு முன், 40 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார். அதில் 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டார். மீதமுள்ள பணத்தை கொடுக்க முடியாமல் கால தாமதமாகி உள்ளது.
இதனால், பாக்கி பணத்தை கேட்டு தகராறு செய்த ஆரோன், 'கடன் வாங்கிய விபரத்தை, உன் கணவரிடம் சொல்வேன்' என, இரு நாட்களுக்கு முன் மிரட்டி உள்ளார்.
இதனால் மனமுடைந்த சமீம், 23ம் தேதி மாலை தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். பலத்த காயமடைந்தவரை, குடும்பத்தினர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று அதிகாலை உயிரிழந்தார். ஓட்டேரி போலீசார் ஆரோனை கைது செய்தனர்.