ஈரோடு, நவ. 27-
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் ஈரோட்டில் நடந்தது. சிறப்பு பார்வையாளரான சிவசண்முகராஜா பேசியதாவது:
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம், இம்மாவட்டத்தில், 2,222 ஓட்டுச்சாவடி, ஆர்.டி.ஓ., அலுவலகம், தாலுகா அலுவலகம், தேர்தல் பிரிவு அலுவலகங்களில் நடக்கிறது. அனைத்து வேலை நாட்களிலும் டிச.,8 வரை படிவங்கள் பெறப்படும். மாவட்டத்தில், 59.36 சதவீத வாக்காளர்கள், தங்களது ஆதார் எண்ணை, வாக்காளர் அட்டையுடன் இணைத்துள்ளனர். இவ்வாறு பேசினார்.
டி.ஆர்.ஓ., சந்தோஷினி சந்திரா, பயிற்சி கலெக்டர் பொன்மணி, ஆர்.டி.ஓ.,க்கள், தேர்தல் பிரிவு தாசில்தார் சிவகாமி உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக பல்வேறு ஓட்டுச்சாவடிகளில் நடந்த சிறப்பு முகாமை, பார்வையாளர் ஆய்வு செய்தார்.