திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில் பயன்படுத்தப்படும், 10 திருக்குடைகள் கோவில் நிர்வாகத்திடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பத்து நாட்கள் நடக்கும் விழாவில், தினமும் காலை, மாலை, பஞ்ச மூர்த்திகள் வெவ்வேறு வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்வு நடக்கும்.
இவ்வாறு வலம் வரும்போது, வாகனங்களில் பொருத்தப்படும் திருக்குடைகள், சென்னையைச் சேர்ந்த ஸ்ரீஅருணாச்சாலா ஆன்மிக பக்தர்கள் சேவா சங்கம் சார்பில், 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 10 திருக்குடைகள் மற்றும் அலங்கார சுருட்டிகள் தயாரிக்கப்பட்டன.
இவை, நேற்று எடுத்த வரப்பட்டு மாடவீதியில் வலம் வந்து, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.