கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ் சங்கம், சின்னசேலம் தமிழ் சங்கம் இணைந்து இருபெரும் விழா கொண்டாடினர்.
கள்ளக்குறிச்சி லாட்ஜ் கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு சின்னசேலம் தமிழ் சங்க காப்பாளர் குணசேகரனா தலைமை தாங்கினார்.
தமிழ் சங்க நிர்வாகிகள் அருணா தொல்காப்பியன், நாகராஜன், இதயம் கிருஷ்ணா, தங்கராசு, கலியன், அம்பேத்கர், கலைமணி முன்னிலை வகித்தனர். சின்னசேலம் தமிழ் சங்க தலைவர் கவிதைத்தம்பி வரவேற்றார்.
குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு குதிரைச்சந்தல் அரசு பள்ளி ஆசிரியர் அனந்தகிருஷ்ணன் பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினார். தொடர்ந்து கவிதைத்தம்பியின் 'காணவில்லை வானவில்லை' எனும் தலைப்பிலான கவிதைநுால் வெளியிடப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ் சங்க நிர்வாகி டாக்டர் ரத்தினவேல் புத்தகத்தை வெளியிட, சென்னை மாநிலப்பதிவுத்துறை தனக்கண்ணு, புலவர்கள் ஆறுமுகம், இளையராஜா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
தமிழ்சங்க நிர்வாகிகள் சந்திரன், மணிபாலன், அறிவழகன், பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மணி நன்றி கூறினார்.