மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள கடுவனுாரிலிருந்து சங்கராபுரம் செல்லும் சாலை படுமோசமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த கடுவனுாரிலிருந்து சங்கராபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தார்கள் பெயர்ந்து பள்ளம் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.
தற்போது திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவிழ்கு கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, கோயம்புத்துார் போன்ற பகுதிகளிருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த சாலையின் வழியாகதான் திருவண்ணாமலைக்கு செல்கின்றனர்.
இந்த சாலையில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு, பழுதான சாலையை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைதுறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.