தியாகதுருகம் : தியாகதுருகம் நகர தி.மு.க., சார்பில் உதயநிதி பிறந்தநாள் விழாவில் மரக்கன்றுகள் வழங்கி கொண்டாடினர்.
தியாகதுருகம் நகர தி.மு.க., சார்பில் நேற்று நடந்த இளைஞர் அணி செயலாளர் உதயநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 15 வார்டுகளிலும் நகர செயலாளர் மலையரசன் தலைமையில் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், பேரூராட்சி சேர்மன் வீராசாமி, துணைச் சேர்மன் சங்கர், பொருளாளர் ராஜசேகர் முன்னிலை வகித்தனர்.
பி.டி.ஓ., அலுவலக எதிரில் இருந்து பஸ் நிலையம் வரை ஊர்வலமாக சென்று அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.அதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
துணை செயலாளர்கள் அக்பர் உசேன் பரசுராமன் மாவட்ட பிரதிநிதி சிவகுமார் ஒன்றிய பிரதிநிதிகள் கதிர்வேல் சக்திவேல் சீனிவாசன் குணசேகரன், பேரூராட்சி உறுப்பினர்கள் சிலம்பரசன், மகாதேவி கொளஞ்சி வேல், அஜித் குமார், கோபால், நிர்வாகிகள் மூர்த்தி, ரத்னவேல், அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.