திருப்பூர் மாவட்ட கேரம் போட்டியில், 168 பேர் பங்கேற்றனர்; மாநில போட்டிக்கு, 48 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் ெஷரீப் காலனி, கிட்ஸ்கிளப் இன்டர் நேஷனல் பள்ளியில், மாவட்ட கேரம் சங்கம் சார்பில், மாவட்ட கேரம் போட்டி நேற்று நடந்தது. கிட்ஸ் கிளப் கல்விகுழுமங்களின் தலைவர் மோகன்கார்த்திக் போட்டிகளை துவக்கி வைத்தார்.
மாவட்ட கேரம் சங்க தலைமை புரவலர் பொன்னுசாமி தலைமை வகித்தார். 51வது வார்டு கவுன்சிலர் செந்தில்குமார், நீலகிரி மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.
முன்னதாக, கேரம் சங்க மாநில சீனியர் துணை தலைவர் சிவக்குமார் வரவேற்றார். சப்-ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுக்கு தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டது. மொத்தம், 168 பேர் போட்டிகளில் பங்கேற்றனர். மூன்று பிரிவில் தலா, 16 பேர் என, 48 பேர் மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.