பல்லடம் போலீஸ் ஸ்டேஷனில், குற்றப்பிரிவில் வேலை பார்த்து வருபவர் மதிவாணன். இவரது மகள் மதுமிதா, 10. பல்லடம் அடுத்த ஆதர்ஸ் மெட்ரிக் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்.
தமிழ்நாடு மாநில சிலம்பாட்ட கழகம், திருப்பூர் மாவட்ட கழகம் இணைந்து மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள், திருப்பூர் சின்னசாமி அம்மாள் அரசு பள்ளியில் நடந்தது.
இதில், திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், மாணவி மதுமிதா தங்கப்பதக்கம் வென்றார். சிறுவயது முதல் மதுமிதா, தீவிர சிலம்பாட்ட பயிற்சி ஈடுபட்டு வருகிறார். பள்ளி கல்வித்துறை, மற்றும் மாவட்ட தடகள சங்கம் சார்பிலும் நடந்த பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பரிசுகள் பலவற்றை வென்றுள்ளார்.
தொடர்ந்து, ஐந்தாவது ஆண்டாக இவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவியை, மாவட்ட சிலம்பாட்ட கழக நிர்வாகிகள், பயிற்சியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.