திருப்பூர் மாவட்ட ஜிம் உரிமையாளர் அசோசியேஷன், வெல்கேர் பிட்னஸ் எக்யூப்மென்ட்ஸ் சார்பில், மாவட்ட பளு துாக்கும் போட்டி, அவிநாசி ரோடு, பங்களா ஸ்டாப்பில் நேற்று நடந்தது.
மாவட்டம் முழுவதும் இருந்தும், 165 பேர் பங்கேற்றனர். முன்னதாக, போட்டியை கிட்ஸ்கிளப் பள்ளி குழுமங்களின் தலைவர் மோகன்கார்த்திக் துவக்கிவைத்தார். 115 ஆண்கள், 50 பெண்கள் என மொத்தம், 165 பேர் பங்கேற்றனர். 55, 65, 70 மற்றும், 75 கிலோ பிரிவில் இருபாலருக்கும் தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டது.
சிரத்தையுடன் பளு துாக்கி, திறமை காட்டி, வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.