பி.ஏ.பி., திட்டம் மூன்றாம் மண்டல பாசனத்துக்கு, வரும் டிசம்பர் மாதம் தண்ணீர் வழங்கப்படுகிறது. பொங்கலுார் ஒன்றியம் சேமலை கவுண்டன்பாளையம் பகிர்மான வாய்க்காலில், 306 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. முட்புதர்கள், மண்மூடி, தண்ணீர் செல்லமுடியாத நிலையில் பகிர்மான வாய்க்கால் உள்ளது. ஆண்டுதோறும் வாய்க்கால் சுத்தம் செய்யும் பணி நடைபெறும். ஆனால் தற்போது பணிகள் நடைபெறவில்லை.
'நிதி ஒதுக்கியோ அல்லது ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலமாகவோ, சேமலை கவுண்டன்பாளையம் பாசன வாய்க்காலை துார்வாரவேண்டும்; கடைமடைவரை, பி.ஏ.பி., தண்ணீர் கிடைக்கச் செய்யவேண்டும்,' என, விவசாயி நந்தகுமார், திருப்பூர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.