அனுப்பர்பாளையம்:திருப்பூர், மகிழம் பிராப்பர்ட்டீஸ் சார்பில், திருப்பூர் மாநகராட்சி, 15 வேலம்பாளையம் அடுத்த காவிலிபாளையத்தில் 'துளிர் வில்லாஸ்' என்ற பெயரில் வீடுகள் மற்றும் வீட்டு மனைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா நேற்று நடந்தது.
துளிர் வில்லாஸ் குறித்து, அதன் உரிமையாளர் வரதராஜன், கூறியதாவது:
இடம் 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 3 முதல் 6 சென்ட் வரை என 31 சைட்கள் உள்ளன.
பாதுகாப்பிற்காக இடத்தை சுற்றி சுற்றுச்சுவர், சோலார் மின் விளக்கு மற்றும் கேமரா அமைக்கப்பட்டுள்ளது.
பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால், 40 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தொட்டி, 33 அடி சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது.
மனையாகவும் வாங்கலாம்; வீடும் கட்டி கொடுக்கிறோம். இரண்டு பெட்ரூம் கொண்ட வீடு 59 லட்சம் ரூபாய்க்கும், மூன்று பெட்ரூம் கொண்ட வீடு 85 லட்சம் ரூபாய்க்கும், விற்பனை செய்து வருகிறோம்.
காற்று மாசுபடாத காற்றோட்டமான இடத்தில் இடம் அமையப்பெற்றுள்ளது. அருகில் பள்ளி வசதி உள்ளது.
இவ்வாறு, வரதராஜன் கூறினார். மேலும் விபரங்களுக்கு : 97878 01019, 63805 97525,