அவிநாசி:அவிநாசி ஒன்றியப் பகுதிகளில், வளர்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை போடப்பட்டது.
வேலாயுதம்பாளையம் ஊராட்சி, சின்ன கருணைபாளையத்தில், மாவட்ட கவுன்சிலர் வார்டு பணிக்கென ஒதுக்கப்பட்ட நிதி, 8 லட்சம் ரூபாயில், கவுண்டம்பாளையம் எல்லை பகுதியில் தார் சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சிவகாமி, வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் சுப்ரமணியம், வேலாயுதம்பாளையம் ஊராட்சி தலைவர் சாந்தி, ஊர் பிரமுகர் ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
n தத்தனுார் ஊராட்சி, கணபதி நகர், கோபி-சத்தி ரோடு முதல், ஊராட்சி மன்ற அலுவலகம் வரை, தார் சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் வார்டு பணிக்கென ஒதுக்கப்பட்ட நிதி, 9 லட்சம் ரூபாயில் பணி மேற்கொள்ளப்படுகிறது. நிகழ்வில், அவிநாசி ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகதீசன், ஒன்றியக்குழு உறுப்பினர் உமாபதி, ஊராட்சி தலைவர் விஜயகுமார், துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.