உடுமலை:மின்நுகர்வோர், தங்களது ஆதார் விபரத்தை இணைக்க புதிய இணையதள வசதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு மின்சார வாரியம், மின்நுகர்வோரின் மொபைல் எண்களுக்கு, ஆதார் இணைக்கலாம் என, மின்வாரியம் குறுஞ்செய்தி அனுப்பி வருகிறது. மின் இணைப்பு எண்ணுடன் வரும் குறுஞ்செய்தியில், இதுதொடர்பான அரசாணை தேதியும், ஆதார் இணைப்புக்கான, இணையதள முகவரியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்நுகர்வோர், https://www.tnebltd.gov.in/adharupload என்ற இணையதள முகவரியில் சென்று. மின் இணைப்பு எண்ணை பதிவிடலாம்.
பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு வரும் கடவு எண் வாயிலாக, உரிமையாளர் சரிபார்க்கப்படுகின்றனர். அதற்குப்பிறகு, ஆதார் எண்ணை பதிவு செய்து, அதன் போட்டோவை பதிவேற்றம் செய்ய, வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஆதார் இணைக்க வசதியாகவும், பெயர் மாற்ற ஏதுவாகவும் திருப்பூர் மாவட்டத்தில், சிறப்பு முகாம்கள் நடத்திடவும் மின்வாரியம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.