உடுமலை:சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கலைத்திருவிழா போட்டிகள் நடந்தது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், கலைத்திருவிழா நடத்த வேண்டும் என்று, கல்வித்துறை அறிவுறுத்தியது. அதன்படி குடிமங்லகம் ஒன்றியம் சோமவாரப்பட்டியில் நடந்த விழாவில், குடிமங்கலம் வட்டார கல்வி அலுவலர் மனோகர், மேற்பார்வையாளர் சுமதி முன்னிலை வகித்தனர்.
மாணவ, மாணவியருக்கு, பேச்சு, நடனம், பாட்டு, கட்டுரை போட்டி இசைக்கருவிகள் இசைத்தல், தனி நடிப்பு, நாடகம் நகைச்சுவை, களிமண் உருவம் செய்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.
பள்ளி தலைமையாசிரியர் கோப்பெருந்தேவி ஆசிரியர்கள், போட்டிகளை நடத்தினர். பள்ளி மேலாண்மை குழு தலைவர் சசிகலா மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.