உடுமலை:உடுமலை ஓம்சக்தி மகளிர் மன்றம் சார்பில், 38ம் ஆண்டு, கஞ்சி கலய விழா நேற்று நடந்தது.
உடுமலை காந்திசந்து-2 ஓம்சக்தி மகளிர் மன்றம் சார்பில், 38ம் ஆண்டு கஞ்சி கலய விழா நேற்று முன்தினம், கலச விளக்கு வேள்வி பூஜையுடன் துவங்கியது.
தொடர்ந்து, நேற்று உடுமலை காளியம்மன் கோவிலில், கஞ்சி கலய ஊர்வலம் துவங்கியது. இதையொட்டி, கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை, ஓம்சக்தி மன்ற பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.