உடுமலை:உடுமலையில், பக்தி சொற்பொழிவு வரும், 30ம் தேதி துவங்குகிறது.
உடுமலை காந்திநகரில், நாமத்வார் பிரார்த்தனை மையம் அமைந்துள்ளது. மையத்தில், வரும் 30 ம் தேதி துவங்கி, டிச., 7ம் தேதி வரை, தொடர் ஆன்மிக சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அதன்படி, வரும், 30ம் தேதி, பாகவத மாஹத்மயம், டிச., 1ல், வ்யாஸ நாரத ஸம்வாதம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
வரும், டிச., 6ல், கிருஷ்ண ஜனனனம், டிச., 7ல், ருக்மணி கல்யாணம் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் பாராயண பூர்த்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் முரளீதர சுவாமிஜி முன்னிலையில், நடைபெற உள்ளது.