அதிக பாரம்: லாரி சிறைபிடிப்பு
Added : நவ 28, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, அதிக பாரம் ஏற்றி வந்த டிப்பர் லாரியை பா.ஜ.,வினர் மற்றும் பொதுமக்கள் சிறைபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளி அருகே கற்கள் அதிகளவு ஏற்றி வந்த டிப்பர் லாரியை, ஒன்றிய பா.ஜ., தலைவர் முத்துக்குமார், அரசு தொடர்பு மாவட்ட தலைவர் வெள்ளைச்சாமி, ஒன்றிய பொதுச் செயலாளர் ரமேஷ், ஒன்றிய துணைத்தலைவர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மேற்கு போலீசார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதன்பின், லாரியில் ஏற்றி வந்த கற்கள் அதிக பாரம் உள்ளதா என, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். லாரியை தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.

தாசில்தார் வைரமுத்து, 'பாரம் குறித்து எடையளவு செய்து, வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் ஒப்படைத்து அபராதம் விதிக்கலாம்,' என்றார். இதையடுத்து, போலீசார், லாரியை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.

அங்கு வந்த பா.ஜ.,வினர் மற்றும் பொதுமக்களிடம், நாளை (இன்று) காலை வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் ஒப்படைத்து அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் உறுதியளித்தனர்.

பா.ஜ.,வினர் கூறுகையில், 'தி.மு.க., ஆட்சியில், கேரளாவுக்கு கனிமவளங்கள் அதிகளவு கடத்தப்படுகின்றன. 'பர்மிட்' அளவை விட கூடுதலாகவும், 'பர்மிட்' இன்றியும், கனிமவளம் கடத்தல் தொடர்கிறது.

இந்த லாரிகள், மக்கள் போக்குவரத்துள்ள ரோடுகளில், அதிக பாரத்துடன், அதிவேகத்தில் இயக்கப்படுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதை கட்டுப்படுத்தாவிட்டால், பா.ஜ., சார்பில், கனிமவளம் ஏற்றிச்செல்லும் அனைத்து வாகனங்களையும் தடுக்க உள்ளோம்,' என்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X