நீரில் மூழ்கி மெக்கானிக் பலி
பொள்ளாச்சி, வடக்கிபாளையம் பிரிவைச் சேர்ந்தவர்,அபிபுர் ரஹ்மான், 70;மோட்டார் மெக்கானிக். இவர், நேற்று முன்தினம் இரவு, அர்த்தநாரிபாளையத்தில் உள்ளதோட்டத்தில்,மின்மோட்டார்பழுது நீக்க சென்றார்.
கிணற்றின் அருகே அமர்ந்து, பணியில் ஈடுபட்டிருந்த போது, கால் தவறி கிணற்றுக்குள், விழுந்தார். சிறிது நேரத்தில், மூச்சு திணறி இறந்தார்.அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அவர் கிணற்று நீரினுள் மூழ்கி விட்டார். இதுபற்றி, ஆழியாறு போலீசாருக்குதகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்தஆழியாறு போலீசார்,மெக்கானிக் அபிபுர் ரஹ்மான்உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.
காய்கறி வியாபாரி தற்கொலை
பொள்ளாச்சி அருகே, நெகமம் பஜனை கோவில் வீதியை சேர்ந்த காய்கறி வியாபாரி செந்தில்குமார்,40. இவரது மனைவி கவுசல்யா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில், கடந்த, 24ம் தேதி, என்.சந்திராபுரம் ரோட்டில் தென்னை மரத்துக்கு தெளிக்கும் மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அவ்வழியாக சென்றோர், உறவினருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற உறவினர்கள், அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர்இறந்தார்.
இதுகுறித்து, நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.
கிணற்றில் விழுந்த பெண் பலி
நெகமம் அருகே, கணக்கம்பட்டியை சேர்ந்த ரமேஷ்குமார், 40, தனியார் மருத்துவமனையில் பணியாற்றுகிறார். இவரது மனைவி சத்தீஸ்வரி,35. நெகமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் சுகாதார தன்னார்வலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கணவன், மனைவி இடையே அடிக்கடிதகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால், சத்தீஸ்வரி, பொன்னாயூரில் உள்ள பெற்றோருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மகனுக்கு உடல்நிலை சரியில்லை என, பெற்றோரிடம் கூறிய சத்தீஸ்வரி, கணக்கம்பட்டிக்கு நடந்து சென்றார். அப்போது, அங்கிருந்த கிணற்றில் விழுந்தார். அவ்வழியாக சென்றோர் நெகமம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சத்தீஸ்வரியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்ததை உறுதி செய்தனர். இதுகுறித்து, நெகமம் போலீசார் விசாரிக்கின்றனர்.