ஆர்.கே.பேட்டை,-ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தில், 15 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். கிழக்கு பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியின் எதிரே, கிராமத்தின் ஒட்டுமொத்த கழிவு நீரும் தேங்கி நிற்கிறது.
இது ஊருக்கு பொதுவான தோப்பு என்பதால், அங்கு தேங்கும் கழிவு நீரை அகற்ற யாரும் அக்கறை காட்டவில்லை.
தோப்பாக இருந்த இந்த இடம், தற்போது கழிவு நீரால், புதர் மண்டிக் கிடக்கிறது. இதனால், பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கழிவு நீரை முறையாக அகற்றவும், தோப்பு பகுதியை சுத்தமாக பராமரிக்கவும் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.