கடலுார் : தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி எம்.எல்.ஏ., பிறந்த நாள் கடலுார் கிழக்கு மாவட்டதி.மு.க., சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
நேற்று காலை உதயநிதி எம்.எல்.ஏ., வை, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போதுகிழக்கு மாவட்ட தி.மு.க., பொருளாளர் எம்.ஆர்.கே.கல்விக்குழும சேர்மன் கதிரவன் உடனிருந்தார்.
அதன் பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின்பேரில், கடலுார் கிழக்குமாவட்டத்திற்குட்பட்ட மாநகரம், நகரம், ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில், உதயநிதி பிறந்தநாளையொட்டி அன்னதானம், மாணவ மாணவியர்களுக்கு நோட்டு புத்தகம், மரக்கன்று நடுதல், ஆங்காங்கே கட்சிகொடியேற்றி இனிப்பு வழங்குதல் போன்றவற்றை நிர்வாகிகள் செய்தனர்