கடலுார் : இரண்டாம் நிலை காவலர் மற்றும் தீயணைப்புத் துறை காலி பணியிடங்களுக்கான தேர்வை மாவட்டத்தில் 14,300 பேர் எழுதினர். 2,481பேர் தேர்வு எழுதவில்லை.
ஆயுதப்படை காவலர், தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர், சிறைக் காவலர் ஆகியஇரண்டாம் நிலை காவலர் பதவி மற்றும் தீயணைப்புத் துறை வீரர்கள் பதவிக்கான 3,552 காலிபணியிடங்களுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமத்தால் தேர்வு நடத்தப்படுகிறது.
இதற்கான எழுத்து தேர்வுகள் நேற்று நடந்தது. தேர்வு எழுத நான்கு திருநங்கைகள், 3,642 பெண்கள்உட்பட 16,782 பேர் விண்ணப்பித்தனர்.கடலுார் மாவட்டத்தில் கடலுார் ஜெயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி, எஸ்.குமாரபாளையம்கிருஷ்ணசாமி இன்ஜினியரிங் கல்லுாரி உள்ளிட்ட 12 தேர்வு மையங்களில் நான்குதிருநங்கைகள், 3,089 பெண்கள் உட்பட 14,300 பேர் தேர்வு எழுதினர்.
தேர்வு மையங்களுக்குபலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு எழுதுபவர்களை தேர்வு மையத்திற்குள்அனுப்பும் முன் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர். காலை 10 மணிக்கு பின்னர்வந்தவர்களை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இதனால் ஏராளமானோர் ஏமாற்றத்துடன்திரும்பி சென்றனர்.
காவலர் தேர்வையொட்டி கடலுாரில் எஸ்.பி., சக்திகணேசன் தலைமையில் 1,500க்கும்மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
தேர்வு மையங்களைவிழுப்புரம் டி.ஐ.ஜி பாண்டியன், எஸ்.பி சக்திகணேசன் ஆய்வு செய்தனர்.விண்ணப்பித்த 16,782 பேரில் 14,300 பேர்கள் மட்டுமே தேர்வு எழுதினர். 2,481 பேர் தேர்வுஎழுதாமல் ஆப்சென்ட் ஆனார்கள்.