வாணியம்பாடி : வாணியம்பாடியில், மூதாட்டிக்கு உதவுவது போல நடித்து, 10 சவரன் நகையை பறித்த இருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
வழியில் இருவர் மூதாட்டிக்கு உதவுவது போல நடித்து, இப்பகுதியில் திருடர்கள் தொல்லை உள்ளது. நகையை கழற்றி கைப்பையில் பத்திரமாக வைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர்.அதை நம்பிய மூதாட்டி, 10 சவரன் நகையை கழற்றி கைப்பையில் வைத்தார். பின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, நகையை காணாமல் அதிர்ச்சியடைந்தார். உதவுவதாக கூறிய களவாணிகள், கைவரிசை காட்டியது தெரிந்தது.
புகாரின்படி வாணியம்பாடி போலீசார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.